பள்ளிக்கு சென்று வரும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2021ல், பள்ளிக்கு சென்று வரும் 11 வயது சிறுமியை ராஜா என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் . இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர இளைஞர் ராஜா மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது .
பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ராஜாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் . இந்நிலையில் இந்த வழக்கை நேற்று விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் பள்ளி சென்று வரும் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ஆயுள் தண்டனை குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு செய்யக்கூடாது என்றும் குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் சாகும் வரை சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி அந்த குற்றவாளிக்கு 10 ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.