தமிழ்நாடு காவல்துறையில் குற்றம் மற்றும் குற்றவாளிகள் வலைப்பின்னல் தொழில்நுட்ப திட்டம் (சிசிடிஎன்எஸ்) கடந்த 2013 செப்டம்பர் 26ம் தேதி முழுமையாக செயல்பாட்டிற்கு வந்தது.
இன்று வரை இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தத்ப்பட்டு வரும் நிலையில் தற்போது இதனை அப்டேட் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது . விரைவில் புதிய தொழில்நுட்பத்தில் சிசிடிஎன்எஸ் நடைமுறைக்கு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது .
கோர்ட் சம்மன் அனுப்புவது, பிடிவாரன்ட் போன்றவை இனி ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படும் என்றும் அனைத்து வகையான குற்றவாளிகளையும் வகைப்படுத்தி கண்காணிக்க தேவையான திட்டங்கள் உருவாக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குற்றவாளி எந்த மாநிலத்தில் குற்றம் செய்தாலும் அவரை தேடி கண்டுபிடிக்க தேவையான ஆதாரங்களை பெறும் வகையில் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வீட்டில் இருந்தபடி புகார்தாரர் ஆன்லைனில் புகார் அளித்து தேவையான நிவாரணம் பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .