எதிர்வரும் தேர்தலுக்காக அணைத்து கட்சிகளும் தீவிரமாக (CPIM) களப்பணியாற்றி வரும் நிலையில் தற்போது எந்தெந்த தொகுதிகளில் யார் யார் போட்டியிட போகிறார்கள் என்ற விவரங்களை ஒவ்வரு கட்சிகளும் வரிசையாக அறிவித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் யார் யார் எந்ததெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் என்ற அறிப்பினை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை, திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை தொகுதி எம்பியான சு. வெங்கடேசன் மீண்டும் இதே தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
திண்டுக்கல் தொகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலக்குழு உறுப்பினரும், திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஆர்.சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.