நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக, ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
புனேயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இந்திய அணி பவுலிங் செய்தபோது இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 9வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் முதல் 3 பந்துகளில் லிட்டன் தாஸ் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 3வது பந்தை வீசும்போது எதிர்பாராத விதமாக காலில் காயம் ஏற்பட வலியால் மைதானத்திலேயே துடித்துள்ளார் .
இதையடுத்து அணியின் பிசியோ உடனடியாக ஓடி வந்து பார்த்தபோது பாண்டியாவால் தொடர்ந்து பந்துவீச முடியாது ஏறணும் அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்றும் தெரிவித்தனர் .
இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் , அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டு தற்போது ஓய்வில் இருப்பதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது .
காலில் காயம் சற்று பலமாக இருப்பதால் வரும் 22-ஆம் தேதி தரம்சாலாவில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் லீக் போட்டியிலும் ஹர்திக் பாண்ட்யா விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடிய அணைத்து போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது காயம் காரணமாக ஹர்திக் ஒரு போட்டியில் விலகியிருப்பது அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.