கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை, 49 நபர்கள் உயிரிழந்து இருப்பதாகவும், 120க்கும் ( Kallakurichi Death count increase ) மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கூறியதாவது :
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் இதுவரை, 49 நபர்கள் உயிரிழந்து உயிரிழந்துள்ளனர் , 120க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சையில் உள்ளனர்.
சிறப்பு மருத்துவக்குழுவினர் மற்றும் செவிலியர்கள் குழு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Also Read : கள்ளச்சாராய விற்பனைக்கு காவல்துறை உடந்தை – பேட்டியில் பகீர் கிளப்பிய சசிகலா..!!
29 நபர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கிற்குத் தேவையான உதவிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக 29 நபருக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. விஷச் சாராயம் குடித்து ( Kallakurichi Death count increase ) சிகிச்சையில் உள்ளவர்களில், 30 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.