மகளிர் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதில் நேற்று இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்திய பந்து வீச்சை தாக்கு பிடிக்க தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் மொத்தமாக 118 ரன்களுக்கு சுருண்டது. இந்த எளிமையான இலக்கை நோக்கி பேட் செய்த இந்திய மகளிர், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கிள் கலக்கிய கவுர், மற்றும் கோஷ் இணை வெற்றிக்கு தேவையான இலக்கை சிறப்பாக எட்டி பிடித்தது.
இந்த போட்டியில் முக்கியமான சிறப்புமிக்க சாதனையை இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா படைத்துள்ளார். நேற்று 4 ஓவர்கள் வீசிய தீப்தி 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டை வீழத்தினார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார். இந்திய ஆடவர் அணியில் கூட முன்னணி பந்து வீச்சாளர்கள் யாரும் சர்வதேச 20 போட்டிகளில் 100 விக்கெட் என்ற மையில்கல்லை தொடவில்லை.
முதல் முறையாக இந்த சாதனையை மகளிர் அணியை சேர்ந்த தீப்தி ஷர்மா 100 விக்கெட்களை கைபற்றியது மகளிர் அணிகக்கு மேலும் மகுடம் சூட்டிய நிகழ்வாக அமைந்துள்ளது. சமீப காலங்களில் இந்திய மகளிர் அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்துவருகிறது. தொடர்ந்து பேட்டிங்கில் மட்டுமே அடுத்தடுத்த சாதனைகளை தன்வச படுத்திய மகளிர் அணி தற்போது பந்து வீச்சிலும் ஆதிக்கம் காட்டி வருகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 2 லீக் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேலும் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை அடைந்துள்ளது இந்திய ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.