என்.எல்.சி.யில் முதல் அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி இன்று முதல் துவங்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்தில் 1962ம் ஆண்டு கட்டப்பட்ட முதல் அனல் மின் நிலையத்தின் 25 ஆண்டுகள் காலக்கெடு நிறைவடைந்ததை அடுத்து, அதனை இடிக்கும் பணி தொடங்கியது.
அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு இயங்கி வந்தாலும், ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்கக் கூடாது என வரையறை செய்யப்பட்டு, இந்த அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது .
Also Read : பொம்மைகளுக்கு பதிலாக பெண்களை நிற்க வைத்த துணிக்கடை..!!
மத்திய பசுமை தீர்ப்பாயதின் உத்தரவையடுத்து நெய்வேலி என்.எல்.சி.யின் முதலாவது அனல் மின் நிலையம் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூடப்பட்டது.
இந்த அனல் மின் நிலையத்தை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தி இழப்பை ஈடு செய்யும் வகையில் புதிய அனல் மின் நிலையம் செயல்படத் தொடங்கியது.
இந்த நிலையில் பாதுகாப்பாக என்எல்சி முதலாவது அனல் மின் நிலையத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது.
இந்த முதலாவது அனல்மின் நிலையம் ஜெர்மன், ரஷ்ய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.