கனமழை காரணமாக சதுரகிரி வனப்பகுதிக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் கடனட்டை சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வரும் 15 முதல் 18ம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
மழையின் தக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதாலும் வனப்பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என்றும் குறிப்பாக பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் எனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
காட்டுக்குள் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மலைகிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் மேல் இருந்து கீழே வரவேண்டாம் என்றும் கீழ் இருந்து யாரும் மேலே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது