இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் சீசன் இன்று கோலாகலமாக துவங்க. ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக 15 சீசன்ககளை கடந்துள்ளது. இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திரா மோடி மைதானதில், இசை, நடன நிகழ்ச்சியுடன் சிறப்பாக தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் தற்போதைய சாம்பியனான குஜராத் அணி சென்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஐபிஎல் சீசனின் முதல் போட்டி என்பதால், இந்த போட்டியின் மீதான ஆர்வமும், வீரர்களின் ஆட்டத்தை காண ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் தோனியின் ஆட்டத்தை காண அணி பேதம் இல்லாமல் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர். இந்த போட்டிக்கான பயிற்சி மேற்கொள்ள 4 நாட்களுக்கு முன்னதாக அனைத்து வீரர்களும் தங்கள் அணியின் பயிற்சி கூடத்தில் இணைந்துள்ளனர்.
இந்த போட்டியிக்கான பயிற்சியில் சென்னை, குஜராத் அணி வீரர்கள் 2 நாட்களுக்கு முன்னதாக குஜராத் வந்து சேர்ந்து வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த பயிற்சி போட்டியை காணவே மைதானத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த வாரம் தொடக்கத்தில் சென்னை அணி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வியரலாக பரவியது.
அந்த அளவிற்கு ஐபிஎல் போட்டியின் மேல் இந்த ரசிகர்கள் பெறும் ஆவல், எதிர்ப்பார்ப்பு வைத்துள்ளனர். இன்று தொடங்கும் போட்டியில் தோனி களமிறங்க போவதை காண கோடி கணக்கான ரசிகர்கள் காத்துள்ளனர். ஆனால் அவர்கள் ஆசைக்கு ஏமாற்றம் வரும் நிலமை தான் நேற்று நடந்துள்ளது.
நேற்று நடந்த பயிற்சி போட்டியின் போது தோனிக்கு இடது காலில் காயம் ஏற்பட்டது. அதனால் பயிற்சியை முடித்துவிட்டு ஓய்வெடுக்க சென்றுவிட்டார். இந்த காயம் தொடர்பாக, சென்னை அணி நிர்வாகம் சொன்ன பொழுது, தோனிக்கு காயம் ஏற்பட்டது உண்மை தான் இருந்தாலும் அவர் சென்னை அணிக்காக முதல் போட்டியில் கலமிறங்குவார் என தெரிவித்தனர். முதல் போட்டியில் அப்படி தோனி களமிரங்கவில்லை என்றால் ஜடேஜா அல்லது பென் ஸ்டோக்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார்கள் என தெரிகிறது.