சென்னை மக்கள் எப்போதோ தன்னை தத்தெடுத்துவிட்டனர் என்றும் எனக்கு இங்கு கிடைக்கும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என LGM படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட தோனி சற்று எமோஷனலாக கூறியுள்ளார் .
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி தற்போது தோனி என்டர்டைன்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார் .
தமிழ் ரசிகர்களின் மேல் உள்ள அளவற்ற காதலால் தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்த தோனி மற்றும் சாக்ஷி தோனி இணைத்து தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் லவ் டுடே படத்தில் நடித்து இளசுகளின் மனதை கொள்ளைகொண்ட நடிகை இவானா ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, நதியா,மிர்ச்சி விஜய் , பூஜித்த ,VTV கணேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் .
ரமேஷ் தமிழ்மணி இயக்கிய இந்த படத்திற்கு அவரே இசையும் அமைத்திருக்கிறார். இந்நிலையல் LGM படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது . இதில் தல தோனியும் அவரது மனைவி சாக்ஷியும் கலந்துகொண்டு LGM படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை வெளியிட்டனர் .
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய எம்.எஸ்.தோனி கூறியதாவது :
ஒரு தயாரிப்பாளராக என்னுடைய முதல் படம் தமிழ் படமாக அமைந்ததை விதியாகவே கருதுகிறேன்.சென்னை மக்கள் எப்போதோ என்னை தத்தெடுத்து விட்டனர் .
எனக்கு இங்கு கிடைக்கும் அன்பை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது, சென்னை எப்போதுமே எனக்கு ஒரு சிறப்பான நகரமாக இருந்துள்ளது .
எனது முதல் டெஸ்ட் போட்டியை சென்னையில்தான் விளையாடினேன், டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களும் சென்னையில் தான் அடித்தேன்.
LGM படத்தை பொறுத்தவரை நினைத்ததை விட மிக வேகமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது, படப்பிடிப்பு தளத்தில் உணவு முறையாக வழங்கப்பட வேண்டும் என ஸ்ட்ரிக்டாக தெரிவித்திருந்தேன். இதைத்தவிர எந்த குறுக்கீடும் நான் செய்யவில்லை;
படம் எடுத்து முடித்தவுடன் ஒருமுறை எனக்கு காட்டுங்கள் நான் எனக்கு என்ன பிடித்துள்ளது என கூறுகிறேன் என்றே கூறி இருந்தேன் என தோனி தெரிவித்துள்ளார் .