உத்தர பிரதேசத்தில், திருமண மேடையில் கையை பிடித்து மணமகன் (bridegroom) இழுத்ததில் தவறி விழுந்த மணமகள் திருமணமே வேண்டாம் என திருமணத்தை ரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில், பிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள காயிர்கார் என்ற நகரத்தில் வசித்து வரும் ஆதேஷ் என்பவருக்கும், ஜஸ்ரானா நகரில் ஜஜுமாய் கிராமத்தில் வசித்து வரும் மனோஜ் குமாரி என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
இதற்காக, இரு வீட்டாரும் விறுவிறுப்பாக திருமண நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், விருந்தினர் இல்லம் ஒன்றில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகி வந்தன.
இதனையடுத்து, மணமக்களின் திருமண ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு விருந்தினர் இல்லம் வந்தடைந்தது. பின்னர், இரவு உணவு முடிந்ததும், மணமக்கள் இருவரும் மாலை மாற்றி கொள்ளும் நிகழ்ச்சிக்கு தயாரானார்கள்.
இந்த நிகழ்ச்சிக்காக, மணமகன் (bridegroom) முதலில் மேடைக்கு வந்து சேர்ந்து விட்டார். மேலும், அலங்காரம் முடிந்து தோழிகள் சூழ, மணமகள் மெல்ல நடை போட்டு மேடைக்கு வந்து உள்ளார். அதுவரை அமைதியாக இருந்த மணமகன் ஆதேஷ், சட்டென மணமகள் கையை பிடித்து சீக்கிரம் வரும்படி மேடைக்கு இழுத்து உள்ளார்.
இதனால், தடுமாறிய மணமகள் மேடையில் தவறி விழுந்து விட்டார். இதில், மணமகள் மனோஜ் குமாரி ஆத்திரம் அடைந்த நிலையில் உடனே, இந்த திருமணம் வேண்டாம் என முடிவு செய்து, திருமணத்தையும் ரத்து செய்து விட்டார்.
ஆதேஷின் இந்த செயலால் மணமகள் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்த நிலையில், மேடையிலேயே இருவீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து, இதுபற்றி தகவல் அறிந்து ஹர்வேந்திர மிஷ்ரா தலைமையிலான ஷிகோகாபாத் காவல் நிலைய காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை சரி செய்ய முயன்றனர்.
இதனைத் தொடந்த்து இரு குடும்பத்தினரும் மணமகளை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், தனது முடிவில் மணமகள் மனோஜ் குமாரி திருமணம் வேண்டாம் என்று உறுதியாக இருந்து விட்டார். இதன் பின்னர், திருமணம் நின்று போன நிலையில், மணமகள் இன்றி ஊர்வலம் திரும்பிச் சென்றது.
இந்நிலையில், இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.