இயக்குநர் மணிகண்டன்(director manikandan) வீட்டில் திருடியவர்கள், வீட்டின் கதவில் மன்னிப்பு கடிதத்துடன் தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை, தொங்க விட்டு சென்றுள்ளனர்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் இயக்குனர் மணிகண்டன். பிரபல திரைப்பட இயக்குநரான இவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை, கடைசி விவசாயி உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
இவரது சொந்த வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக திரைப்பட வேலையாக மணிகண்டன் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ளார்.
உசிலம்பட்டி வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துக் கொண்ட திருடர்கள், திட்டமிட்டு அவரது வீட்டில் திருடி உள்ளனர்.
இதையும் படிங்க : Resignation letter : செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதம்! ஆளுநர் அளித்த பதில்!
உசிலம்பட்டியில் அவரது வீட்டில் அவர் வளர்த்து வரும் நாய்க்கு அவரது டிரைவர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோர் தினசரி சென்று உணவு கொடுத்துச் செல்வார்கள்.
இதன்படி நாய்க்கு உணவளிக்க நரேஷ்குமார் சென்றிருந்த போது, வீட்டின் கதவுகள் திறந்து கிடந்துள்ளது. இதையடுத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
https://x.com/ITamilTVNews/status/1757305743877759090?s=20
அதில் கடைசி விவசாயி திரைப்படத்திற்காக, மத்திய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உசிலம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மணிகண்டன் (director manikandan) வீட்டின் கதவில், ஒரு பாலித்தீன் பையில், தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்களை வைத்து சென்றுள்ளனர்.
மேலும், ஐயா எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் உழைப்பு உங்களுக்கு… என்ற மன்னிப்பு கடிதத்தையும் வைத்து விட்டு கொள்ளையடித்தவர்கள் சென்றுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தேசிய விருதுக்கான பதக்கங்களை கைப்பற்றி தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்