குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிப்பது தொடர்பாக எழுந்த கோரிக்கைகள் குறித்துதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
குறைதீர் அழைப்பு மையம் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி :
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி IV, 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா?
2022 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.
2024 இல் நடைபெற்ற தொகுதி IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
எனவே 2024 ம் ஆண்டு தொகுதி IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன.
எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது .