மதுரையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் உரிய ஆவணங்கள் இல்லாத 38 காளைகள் தகுதி நீக்கம் (Disqualification) செய்யப்பட்டது.
மதுரையில், அவனியாபுரத்தில், நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், காளைகளை பரிசோதனை செய்து அவற்றை அனுமதிக்க (Disqualification) கால்நடைத்துறை இணை இயக்குனர் ராஜ்குமார், உதவி இயக்குனர் சரவணன் தலைமையில் 30 கால்நடை மருத்துவர்கள், கால்நடை உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அங்கு முதல் உதவி அளிக்கவும்,
மேலும், சுகாதாரத்துறை சார்பில் மதுரை மாநகராட்சி மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத் குமார் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் அடங்கிய மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் அங்கு உள்ளனர்.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனமும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது இரண்டாம் சுற்று நிறைவடைந்துள்ளது. இதுவரை 115 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இந்நிலையில், இரண்டாம் சுற்றின் முடிவில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தில் என்பவர் 9 காளைகளை அடக்கி முதலிடத்தில் உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், தற்போது அவனியாபுரத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் அருண் குமார் ஆகியோரும் தலா 6 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.