பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் தங்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அரையிறுதியில் தோல்வியடைந்த கியூபா வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Also Read : இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் முடிவை உடனே கைவிடுக – டிடிவி தினகரன்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் இந்தியாவின் வினேஷ் போகத் இன்று இறுதி போட்டியில் கலந்துகொள்ள இருந்த நிலையில் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் . இந்த செய்தி ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அரையிறுதியில் வினேஷ் போகத் இடம் வீழ்ந்த கியூபா வீராங்கனை குஸ்மான் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளார்.