திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தின்போது, கூழ்வாங்கி குடித்ததாக (SHORT BREAK) புகைப்படத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழநாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சிகளின் சீனியர்களும், பிரபலங்களும் வெவ்வேறு பகுதிகளுக்கும் சென்று தங்களது வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக தரப்பில் ஸ்டாலின் ஒரு பக்கம் பிரசாரம் மேற்கொண்டிருக்க, அவரது மகனும் அமைச்சருமான உதயநிதி இன்னொரு பக்கம் பிரசார பயணம் செய்து வருகிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி செங்கம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது கூழ் வாங்கிக் குடித்ததாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் நம்முடைய வெற்றி வேட்பாளர் அருமை சகோதரர் சி.என். அண்ணாதுரைக்கு ஆதரவாக இன்று காலை பிரச்சாரம் மேற்கொண்ட பின்னர், செங்கத்துக்கு வாக்கு சேகரிக்க சென்று கொண்டிருந்தோம்.
முறையார் பகுதியை நெருங்கியதும் அங்கே கூழ் வியாபாரம் செய்து கொண்டிருந்த பேயாளம்பட்டு கிராமத்தை சேர்ந்த அக்கா சின்ன பாப்பா அவர்கள், பாசத்தோடு வந்து வாகனத்தை இடைமறித்தாரகள். அன்போடு நலம் விசாரித்த அவர், வெயில் அதிகமாக இருக்கிறது என்று கூறி பருகுவதற்கு கூழை கொடுத்தார்.
கழக அரசின் சாதனைகளை வாழ்த்தியதோடு, அவருக்கான கோரிக்கையையும் (SHORT BREAK) உரிமையோடு முன் வைத்தார். அக்காவின் அன்பில் நெகிழ்ந்தோம். அவருக்கு என் அன்பும், நன்றியும் என்று பதிவிட்டுள்ள உதயநிதி அதற்கான புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.