சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்று வரும் (DMK Youth Wing) திமுக இளைஞரணியின் 2-வது மாநில மாநாட்டில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக திமுக இளைஞரணி 2வது மாநில மாநாட்டிற்காக ஆயத்தமாகி வந்த நிலையில், தற்போது சுமார் 16 ஆண்டுகளுக்குப் இந்த மிக பெரிய மாநாடு நடைபெறுகிறது.
கடந்த 17-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ‘தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு’ சேலத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு காரணமாக திமுக இளைஞரணி நாட்டின் தேதி மாற்றப்பட்டு டிச. 24-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தென் மாவட்டங்களில் பெய்து வந்த வரலாறு காணாத பேய்மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில் திமுக இளைஞரணி மாநாடு 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .
ஒவ்வரு முறை சில தடைகளால் இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டு வந்தாலும் இன்று இம்மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது .
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாநாட்டை தொடங்கி வைக்க . திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கொடியேற்றி வைத்தார்.
திமுக நடத்தும் இந்த 2வது இளைஞணி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஏராளமான திமுக தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாட்டு திடலுக்கு வருகை தந்துள்ளனர்.
திருவள்ளூரில் இருந்து பெத்தநாயக்கன்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்ட நிலையில், அதில் ஏராளமான தொண்டர்கள் வந்துள்ளனர்.
(DMK Youth Wing) சேலத்தில் திமுக இளைஞரணி மாநாட்டையொட்டி 8,000 போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Also Read : https://itamiltv.com/two-painting-art-at-same-time-with-lip/
இந்நிலையில் இந்த மாநாட்டில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தீர்மானங்களை வாசித்துள்ளார்.
திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள் :
- ஆளுநர் பதவி என்பது நிரந்தரமாக நீக்கப்பட வேண்டும்.
- மாநில சுயாட்சி அடிப்படையில் மாநில அரசுகளுக்கு அதிகளவிலான அதிகாரங்களை வழங்க வேண்டும்.
- அமலாக்கத்துறையின் மூலம் எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் பாஜக அரசுக்கு கண்டனம்.
- நாடாளுமன்றத்தில் எம்.பி.-க்களை இடைநீக்கம் செய்யும் போக்கை கண்டித்தல்.
- நாடாளுமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களிடயே மீண்டும் வாக்கு பெறுவதற்காக மதவாத அரசியல் மேற்கொள்ளும் பாஜகவுக்கு கண்டனம்.
- மத்திய பாஜக ஆட்சியை வீழ்த்த முன்கள போராளிகளாக திமுக இளைஞர் அணியினர் செயல்படுதல்.
- நாடாளுமன்றத் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பாக சூளுரைத்தல்.
- நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக போராடும்.
- நாடாளுமன்றத் தேர்தலை ஆட்சி மாற்றத்திற்கான வாய்ப்பாக சூளுரைத்தல். உள்ளிட்ட தீர்மானங்கள் திமுக இளைஞரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.