மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போது இப்பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் தலைவர்கள் பலரும் பல கருத்துக்களையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது மணிப்பூரில் நிலவி வரும் பிரச்சனைக்கு தீர்வு காண காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
மணிப்பூரில் மேலும் 5,000 மத்திய ஆயுதப்படை காவலர்களை குவிப்பது அம்மாநில பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான வழியல்ல.
முதலமைச்சர் பைரன் சிங்தான் மணிப்பூர் பிரச்னைக்கு காரணம் என ஒப்புக்கொண்டு அவரை பதவியில் இருந்து நீக்குவதே அறிவார்ந்த செயல்.
உண்மையான மாநில சுயாட்சி இருந்தால்தான் மெய்தி, குக்கி-சோ, நாகா மக்கள் மணிப்பூரில் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு வர வேண்டும்.
பிரதமர் மோடி பிடிவாதத்தை விட்டுவிட்டு மணிப்பூருக்குச் சென்று அம்மக்களின் கஷ்டங்களையும், கோரிக்கைகளையும் பணிவுடன் கேட்டறிவதே சிறந்த அரசியல் பண்பாக இருக்கும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.