எஸ்.கே நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ‘அயலான்’ படத்தின் டிரைலர் வெளியீடு விழா குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் அயலான் . தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான 2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது .
லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இவர்களுடன் யோகி பாபு , கருணாகரன் , பால சரவணன் ,பானுபிரியா உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் படலக்ளை அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியீடு விழா குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் இசை வெளியிட்டு விழா வரும் 26ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதனை தொடர்ந்து டிரைலர் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி துபாயில் கோலாகலமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.