அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவில் எந்த வித முன்னறிவிப்பின்றி அவர் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக சென்னை ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஐசியு பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜினியின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் . இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் தேவைப்பட்டால் அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் தெரிவித்த நிலையில் தற்போது அவரின் இதய துடிப்பு சீராக இல்லாதால் மருத்துவர்கள் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்தனர் .
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருந்ததும் ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .