மத்திய பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதோடு, அதனை வாங்கி வர மறுத்ததற்கு இயற்கைக்கு மாறான உறவுக்கு (unnatural relationship) மனைவியை வற்புறுத்திய கணவர் மீது மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில், ராதாகிருஷ்ணா காலனியில் வசித்து வரும் தம்பதிக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், திருமணமான ஓராண்டுக்குள் கணவரின் குடும்பத்தினர் அந்த பெண்ணிடம் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கொடுமை செய்து உள்ளனர்.
இதனையடுத்து, கொடுமையின் உச்சமாக பெண்ணின் கணவரும் வரதட்சணை வாங்கி வராத மனைவியை இயற்கைக்கு மாறான உறவுக்கு (unnatural relationship) வற்புறுத்தி உள்ளார். இதற்கு, அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி உள்ளார்.
இந்நிலையில், தனது பெற்றோரிடம் அந்த பெண் நடந்த விவரங்களை கூறி உள்ளார். இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.
அந்த புகாரில், வரதட்சணை வாங்கி வராததற்காக இதுபோன்ற கொடுமையான செயல்களில் கணவர் ஈடுபட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, இதுபற்றி வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணைக்காக அந்த நபரை தேடி சென்றுள்ளனர். ஆனால், போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த அந்த நபர் வீட்டை பூட்டி விட்டு தப்பியோடிதலைமறைவாகி விட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்தும் குடும்பத்தினரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.