கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த சின்ன வெங்காயத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. இவ்வாறு கொண்டுவரப்படும் காய்கறிகளின் வரத்தை பொறுத்து காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயத்தின் விலை 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது இதன் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் மழை காரணமாக வெங்காயம் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டது.
இதன் காரணமாக மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் ஒரே நாளில் 20 ரூபாய் விலை குறைந்து 90 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அதேபோல், கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் உருளை, முள்ளங்கி 30 ரூபாய் வரையிலும், ஊட்டி கேரட் 25 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட் 10 ரூபாய்க்கும், விற்பனையாகிறது.
கர்நாடக பீட்ரூட், உஜாலா கத்திரி, பாகற்காய் 20 ரூபாய்க்கும், வெண்டை 35 ரூபாய்க்கும், வரி கத்திரி 15 ரூபாய்க்கும், முருங்கை, பட்டாணி 70 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட், பச்சை மிளகாய், அவரை 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இஞ்சி ஒரு கிலோ 250 ரொப்பி வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், சற்று விலை குறைந்து 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பூண்டு 170 ரூபாய்க்கும், எலுமிச்சை 80 ரூபாய்க்கும், மாங்காய் 80 ரூபாய்க்கும், தேங்காய் 33 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. மழை தொடர்ந்து நீடித்தால் காய்கறிகளின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.