மலையாளத்தில் மோகன்லால், மீனா இருவரும் ஜோடியாக இணைந்து நடித்து ரூபாய் 5 கோடி செலவில் தயாரான படம் தான் ‘திரிஷ்யம்’ (drishyam-3).
திரிஷ்யம் மலையாள படம் கடந்த 2013ல் திரைக்கு வந்ததையடுத்து ரூபாய் 75 கோடி வசூல் சாதனையும் படைத்து இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் இந்த படம் வெளியானது.
தொடர்ந்து திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்து திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளில் படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பும், மோகன்லாலும் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும், இது திரிஷ்யம் படத்தின் கடைசி பாகமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், திரிஷ்யம் மூன்றாம் (drishyam-3) பாகத்தை தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் அங்குள்ள முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்து தனித்தனியாக இல்லாமல் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் இன்னும் அதிக வசூல் சாதனை படைக்க முடியும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.