போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் கார் ஓட்டியதாக பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மதுரை அண்ணா நகர் ( TTF vasan arrested in Madurai ) போலிசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பைக் சாகசங்கள் மற்றும் தொலைதூர பைக் ரைடிங் உள்ளிட்ட வீடியோக்களை யூடுப் சேனலில் பதிவிட்டு பிரபலமடைந்தவர் தான் டி.டி.எப். வாசன்.
என்னதான் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி இருந்தாலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி வாசன் மீது ஏராளாமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கடந்த ஆண்டு சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது விலையுயர்ந்த பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் சாகசம் செய்யமுற்பட்டபோது டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார் .
Also Read : ஒடிசா முதல்வரின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு..!!
இந்த கோர விபத்தில் வாசனுக்கு சிறு சிராய்ப்புகள் மற்றும் கை எலும்பு முறிவு ஏற்பட்டது . வாசன் விபத்துக்குள்ளாகும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாக அவரை கைது செய்த காவல்துறையினர் 45 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்திருந்தது .
இதையடுத்து ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனு கொடுக்க அவரது இருசக்கர லைசன்ஸ் 10 வருடத்திற்கு ரத்து செய்து பின்னர் ஜாமின் வழங்கப்பட்டது .
இதையடுத்து இன்று வரை பைக் ஓட்டாமல் இருக்கும் டி.டி.எப். வாசன் தனது பயணத்தை காரில் தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காமல் கார் ஓட்டியதாக கூறி டிடிஎப் வாசனை மதுரை அண்ணா நகர் போலீசார் இன்று கைது செய்துள்ளனர் .
கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார் ஓட்டுவதற்கு LLR விண்ணப்பித்த டிடிஎப் வாசன், செல்போனில் பேசியபடி காரை கவனக்குறைவாக ஓட்டியதால் கைது செய்யப்பட்டிருப்பதாக முதற் கட்ட தகவல் வெளியாகி இருந்தது .
செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதான TTF வாசன் மீது ஜாமினில் வெளியே வர முடியாத வகையில் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே வேகமாக வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், விதிகளை மீறியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையில் ( TTF vasan arrested in Madurai ) ஒரு காரியத்தை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .