சென்னை துறைமுகத்தில் 110 கோடி மதிப்புள்ள 112 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்கு பெட்டகம் ஒன்றை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்ததில் போதைப் பொருள் சிக்கியது.
Also Read : 3 பேர் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை – நெல்லை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
இதையடுத்து சந்தேகப்பட்ட இரண்டு பேரை பிடித்து கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இந்த கும்பல் இதே போன்று நான்கு முறை ஆஸ்திரேலியாவிற்கு போதைப் பொருட்களை கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து இந்த போதைப்பொருள் சென்னைக்கு எங்கிருந்து வந்தது. எப்படி கடத்தலை செய்கின்றன என்பது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர் .