கோவை விமான நிலையத்தில் 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சுங்க துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதை பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் அதனை கடத்தி வருபவர்களையும் விற்பவர்களையும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் சுமார் 1 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : ஒரு நாளைக்கு 28,000 சம்பளம் – டெஸ்லா வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு..!!
சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்து, மத்திய வருவாய் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் மாற்றும் சுங்க துறை அதிகரைகள் பயணிகளிடத்தில் தீவிர சோதனை நடத்தினர்.
இதில் சந்தேகத்திற்கிடமாக வந்த பயணியின் உடமையை சோதனை செய்ததில், அவரிடம் போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனே அந்த போதை பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.