ஆன்லைன் மற்றும் ஆப் லைனில் நிலவும் கடும் போட்டி காரணமாக ஸ்மார்ட் வாட்ச், ப்ளூடூத் ஹெட்ஃபோன் ( gadgets ) உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விலை இதுவரை இல்லாத வகையில் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
ஒன்றுக்கு ஒன்று இலவசம், 60 சதவிகிதம் வரை தள்ளுபடி என தயாரிப்பு நிறுவனங்களின் போட்டியால் வாடிக்கையாளர்கள் செம குஷியில் தங்களுக்கு பிடித்த மின்னணு பொருட்களை வாங்கி செல்கின்றனர் .
ஓராண்டு முன் கம்பெனி ப்ளூடூத் ஹெட்ஃபோன் குறைந்தபட்சம் ரூ.800 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.400 குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
Also Read : சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்தது ரீமால் புயல்..!!
இதேபோல் இந்த பக்கம் கம்பெனி ஸ்மார்ட் வாட்ச்கள் குறைந்தது ரூ.2,000ல் இருந்து ரூ.999க்கு விலை செய்யப்பட்டு வருகிறது.
ஆன்லைன் மற்றும் ஆப் லைனில் நிலவும் கடும் போட்டியின் காரணமாகவே இந்த வரலாறு காணாத விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக ப்ளூடூத் ஹெட்ஃபோன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்கள் வாங்க விரும்பும் இளசுகள் ( gadgets ) இந்த விலை வீழ்ச்சியை பயன்படுத்திக்கொண்டு பயனடைந்து வருகின்றனர்.