தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தொடர் மழையின் காரணமாக கரூர் ,திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுளள்னர்.
இதுமட்டுமின்றி தமிழகத்தில் 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர் , மயிலாடுதுறை, நாகை, விருதுநகர், மதுரை, திருப்பத்தூர், தேனி ஆகிய 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது கனமழை வெளுத்துவாங்கி வருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.