மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் , திருவண்ணாமலை உளப்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் திருவண்ணாமலை , ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை காரணமாக பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் முற்றிலும் மூடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 4 அடி வரை தண்ணீர் தேங்கி இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.