இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை மரக்காணம் அடுத்த முதலியார் குப்பத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிக் குழந்தைகளின் கற்றல் செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரிசெய்யும் நோக்கில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டம் ரூ.200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.
குழந்தைகளின் கற்றல் இடைவெளியை குறைக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இத்திட்டம் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும் மாலை வேளையில் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவை மூலம் மகிழ்ச்சியான முறையில் தன்னார்வலர்கள் கற்றுக்கொடுப்பார்கள்.
சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு,கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மரக்காணம் அருகே உள்ள முதலியார் குப்பத்தில் ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா கூறியுள்ளார்.