நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது.
நாமக்கல்லில் முட்டை பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை நேற்றைய தினம் ரூ.4.60 காசுகளாக இருந்தது. இந்த நிலையில் முட்டையின் விலை தற்போது 20 காசுகள் உயர்ந்து ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முட்டை உற்பத்தி முக்கியமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதனால் நாள்தோறும் 5 கோடிக்கு மேல் முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் கேரள மாநிலம், தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தில் பிறப்பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதிகரித்து வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப நுகர்வும் விற்பனையும் சூடுப்பிடுத்துள்ளது. இதனால் நாமக்கல் பகுதிகளில் இருந்து நாள்தோறும் பல லட்சம் முட்டைகள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அனுப்பட்டு வருகின்றன. இதனால் பெரும் மண்டலங்களிலும் முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் முட்டை விலை ரூ.5.05 காசுகளாகவும் ஒரு கிலோ கறிக்கோழி (உயிருடன்) ரூ.5 அதிகரித்து ரூ.116க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
நாமக்கல்லில் முட்டை பண்னைகளில் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் முட்டை விலை அதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.