தேர்தல் நேரத்தில் ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகத்தை (Karthi Chidambaram) ஏற்படும் வகையில் இருப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையர் ராஜினாமா குறித்து கருத்து தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம் கூறியதாவது :
விபரீதமான ஒரு திட்டம் இல்லாமல் பாஜக இவ்வாறு செய்யமாட்டார்கள். சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஒரு அதிகாரி பதவி விலகுவது சந்தேகமாக இருக்கிறது.
பாஜக சொல்வதை இவர் கேட்கவில்லையா? அல்லது பாஜகவுக்கு இவரைவிட சமத்தாக இருக்கக்கூடிய ஒரு அதிகாரி தேவைப்படுகிறாரா? என்பது தெரியவில்லை.
ஏதோவொரு மாஸ்டர் பிளானை முன்வைத்து தான் இவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மத்தியில் அரசியல் நாடகங்கள் பல அரங்கேறி வரும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையர் (Karthi Chidambaram) ராஜினாமா செய்திருப்பதை பெரும் பேச்சு பொருளாக மாறியுள்ளது.