தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி (Electric car factory in Tuticorin) ஆலைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி உள்ளார்.
தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழாமற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடிக்கு வருகை தந்தார் .
கடந்த 50 நாட்களுக்கு முன் வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த மாபெரும் தொழிற்சாலையை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது .
இதையடுத்து மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது .
இந்த நிகழவியில் , சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து வரும் 28-ம் தேதி காலை தூத்துக்குடி (Electric car factory in Tuticorin) வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார் .
குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக பிரதமர் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த விழாவிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .
தூத்துக்குடி மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெறும் இந்த பிரம்மாண்ட விழாக்களின் காரணமாக மாவட்டம் முழுவதும் ஏரளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் .
பிரதமர் உள்பட ஏரளமான தலைவர்கள் வருகை தர உள்ளதால் உயர்கோபுரங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது .