வனப்பகுதிகளை விட்டு மக்கள் வாழும் பகுதிகளில் தஞ்சம் புகும் யானை கூட்டங்களை மீண்டும் காட்டுக்குள் அனுப்ப வனத்துறை பல அதிரடி நடவடிக்கைகளை கையாள உள்ளது.
வனப்பகுதிகளில் சாந்தமாக இருந்து வந்த யானை கூட்டம் சமீப காலமாக மக்கள் வாழும் பகுக்குள் நுழைந்து பெரும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருகிறது . இதில் சிலர் யானையின் கோபத்திற்கு ஆளாகி உயிரிழந்து உள்ளனர் .
வீடு , தோட்டம் என அனைத்தும் இடங்களிலும் புகுந்து அட்டூழியம் செய்யும் காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப வனத்துறை தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது.
இந்நிலையில் கோவை வனப்பகுதியில் இருந்து அருகில் இருந்த பாக்கு தோட்டத்திற்குள் சில யானைகள் நுழைந்துள்ளதாக வனத்துறைக்கு ஊர்மக்கள் தகவல் கொடுத்தனர் .
Also Read : ரோபோ தற்கொலையால் கண்ணீரில் ஊர்மக்கள் – தென்கொரியாவில் நிகழ்ந்த விசித்திர சம்பவம்..!!
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் காட்டு யானைகளை தற்போது ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே ஆலந்துறை, செம்மேடு, முள்ளங்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளை காட்டு யானைகள் சேதப்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வந்த நிலையில் யானைகளை காட்டுக்குள் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்
இதுமட்டுமின்றி பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்வேறு பாதுகாப்பு மற்றும் தீவிர கண்காணிப்பு பணிகளில் வனத்துறையினர் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.