ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார்.
உலகின் பிரபலமான சமூக ஊடகமான ட்விட்டரை, நம்பர் ஒன் கோடீஸ்வரரான எலான் மஸ்க் கடந்த மே மாதம் வாங்குவதற்காக 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ட்விட்டர் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு, ரூ.3.37 லட்சம் கோடி ஆகும்.
அதனைத் தொடர்ந்து இன்னும் ஆறு மாதங்களில் ட்விட்டரின் முழு கட்டுப்பாடும் எலான் மஸ்க் வசம் வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேசமயம், எலான் மஸ்க் ட்விட்டர் வாங்குவது தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
இந்த நிலையில் திடீரென எலான் மஸ்க் ட்விட்டருடனான தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் குறித்த முழுமையான விவரங்களைத் தராவிட்டால் ஒப்பந்தத்தில் இருந்து விலக நேரிடும் எனவும் எலான் மஸ்க் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், எலான் மஸ்க், தனது ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
மேலும் போலி கணக்குகள் மற்றும் ஸ்பேம் குறித்த முழுமையான கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் அளிக்கத் தவறியதால் ட்விட்டரை வாங்கும் முடிவை கைவிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
எலான் மஸ்க் வாங்கிய விலையை விட அந்நிறுவனப் பங்குகள் 4% சரிவைச் சந்தித்துள்ளன. வரவிருக்கும் வாரங்களில் ட்விட்டர் ஒப்பந்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டை எலான் மஸ்க் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.