போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் ஜாபர் சாதிக் மீது கடந்த (jaffer sadiq and ed) சில நாட்களுக்கு முன் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இன்று அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர் .
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் 50 கிலோ எடையுள்ள சூடோபெட்ரைன் என்ற போதை பொருள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்தில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கடத்தலில் மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா தயாரிப்பாளரும், முன்னாள் தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக், நடிகர் மைதீன், அரசியல் பிரமுகர் சலீம் என தகவல் வெளியானது.
இதையடுத்து தி.மு.க.வில் இருந்து ஜாபர் சாதிக் நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் வட மாநிலத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
Also Read : https://itamiltv.com/chennai-nellai-summer-special-train/
இதையடுத்து சிறையில் இருக்கும் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது .
சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக ஜாபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு (jaffer sadiq and ed) செய்திருந்த நிலையில் தற்போது ஜாபர் சாதிக்கின் ஓட்டல் மாற்றும் அவருக்கு சொந்தமான பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.