அதிமுகவின் கொள்கையில் இருந்து நாங்கள் எப்போதும் பிறழ மாட்டோம் பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது என்றும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இ.பி.எஸ் கூறியதாவது :
தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறிய, பெரிய கட்சிகள் என்று இல்லாமல், அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது
உலக அளவில் இந்தியாவின் பெருமையை பாரத பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார் . உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தபோதும், இந்தியாவில் பாதிப்பை குறைக்கும் வகையில் பிரதமர் மோடி துரிதமாக செயல்பட்டார்.
NDA-வில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் உரிய மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது . தமிழ்நாட்டை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுக தான் .
அதிமுகவின் கொள்கையில் இருந்து நாங்கள் எப்போதும் பிறழ மாட்டோம் பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது
எதிர்வரும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 330 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .