ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரேனா தொற்று (infected corona) உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே எஸ் தென்னரசு 43 ஆயிரத்து 923 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார்.
இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற ஈவிகேஸ் இளங்கோவன் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.
இதனை அடுத்து அண்மையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக ஈவிகேஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஸ் இளங்கோவனுக்கு தற்போது கொரோனா தொற்று (infected corona) உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், லேசான தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.