தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்திற்காக மின்சாரத்தைத் திருடியதாக கர்நாடக முன்னாள் முதல்வரான குமாரசாமி மீது மின்திருட்டு வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளின் ஒன்றான தீபவாளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த நவ 12 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக தனது சொகுசு பங்களாவில் மின் அலங்கார விளக்குகளை எரியவிட நினைத்த கர்நாடக முன்னாள் முதல்வரான குமாரசாமி வீட்டின் அருகிலுள்ள மின்கம்பத்திலிருந்து நேரடியாக மின் இணைப்பு தந்து மின்சாரத்தைத் திருடியதாக கூறப்படுகிறது.
இந்நிலையிக் உரிய நிர்வாகத்திடம் எந்த இரு முன் அனுமதியும் வாங்காமல் திருட்டு தனமாக மின்சாரத்தை திருடியதாக பெங்களூரு மின்சார விநியோக நிறுவனம் அளித்த புகாரின் பேரில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.