சென்னையில் இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய (EX-Lover) முன்னாள் காதலன், அதிமுக இளைஞரணி வட்ட செயலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் முகமது யூனஸ் என்ற நபரும் இளம்பெண்ணும் ஒன்றாக பழகி வந்ததாக கூறப்படுகிறது . இதையடுத்து என்ன ஆனதோ தெரியவில்லை இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு வேற இடத்தில மாப்பிள்ளை பார்த்து கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது .
இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் முன்னாள் காதலனான முகமது யூனஸ் மீண்டும் தன்னுடன் சேர சொல்லி அந்த பெண்ணை தொல்லை செய்துள்ளான். ஆனால் அந்த இளம்பெண்ணுக்கு இதில் விருப்பம் இல்லை.
ஆரம்பத்தில் பக்குவமாக சொன்ன முன்னாள் காதலன் நாளடைவில் மிரட்டி உள்ளார் முன்னாள் காதலனின் இந்த செயலால் அப்பெண்ணுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இப்படியே நாட்கள் செல்ல திருமணம தேதியும் நெருங்கி உள்ளது. இதையடுத்து அந்த பெண்ணை பலி வாங்க நினைத்த முகமது யூனஸ் .
அப்பெண்ணுக்கு நிச்சியம் செய்யப்பட்ட மாப்பிளையின் நம்பருக்கு இளம்பெண்ணும் தானும் ஒன்றாக இருந்த புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
அந்த போட்டோக்களை கண்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை குடும்பத்தார் உடனே பெண் வீட்டாருக்கு சொல்லி திருமணத்தை உடனடியாக திருத்தி உள்ளனர்.
இந்த செய்யதியை கண்டு அதிர்ந்து போன பெண் வீட்டார் வேதனையில் கூனி குறுகி போக குடும்பமே சோக கடலில் மூழ்கி போனது.
பின்னர் அப்பெண்ணின் (EX-Lover) முன்னாள் காதலன் முகமது யூனஸ் (18), அதிமுக 53வது வட்ட இளைஞரணி செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் ஒரு சிறார் என மூவர் மீது வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையில் புகார் கொடுக்கப்பட்டது .
Also Read : https://itamiltv.com/find-yourself-in-your-town-program-guidelines/
இதையடுத்து அந்த மூவரையும் தேடி வந்த போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய முன்னாள் காதலன், அதிமுக இளைஞரணி வட்ட செயலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.