ஆளுமைமிக்க மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி கருத்துச் சொல்ல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் அவர் கவுன்சிலராகக்கூட இருந்ததில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார் .
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.வி.சண்முகம் கூறியதாவது :
சாராயம் விற்பவர்கள், கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்கள், பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மற்றும் ஏழை மக்களை ஏமாற்றி பணமோசடி செய்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு கட்சியில் அவர்களுக்கு பொறுப்பு வழங்கிய தரங்கெட்ட அண்ணாமலை, எங்களுடைய ஆளுமைமிக்க தலைவர் ஜெயலலிதாவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?
பாஜக கட்சி என்பது வேறு அண்ணாமலை என்பவர் வேறு அதிமுக கூட்டணியை விட்டு பாஜக வெளியேறலாம் ஆளுமைமிக்க ஜெயலலிதாவைப் பற்றி கருத்துச் சொல்ல அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை அவர் கவுன்சிலராகக்கூட இருந்ததில்லை.
இந்தியாவிலேயே ஊழல் செய்ததற்காக ஒரு கட்சியினுடைய தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால், அது பாஜக கட்சியின் தலைவர்தான்; இதெல்லாம் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் அப்போது அவர் கட்சியில் இல்லை, அப்போது எதாவது காவல் நிலையத்தில் மாமூல் வாங்கிக் கொண்டிருந்திருப்பார்.
சொந்த கட்சியினரே அண்ணாமலை மீது ஊழல் புகார் கூறி வருகின்றனர்.“அதான் உனக்கு அதிமுக புடிக்கலயே போக வேண்டியதானே? யாரு இழுத்து புடிச்சா?ஏன் எங்களை புடிச்சு தொங்கிட்டு இருக்க?” என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் கோபத்துடன் பேசியுள்ளார் .
நாளுக்கு நாள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அதிமுக பாஜக பிரச்சனைகளை தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது .