அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார் .
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியதாவது :
ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் வகையில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகங்கள் கொரோனா பேரிடர் காலத்தில் வேலையில்லா சூழ்நிலையில் பாமர மக்களின் பசியை போக்கி, பல்லாயிரக்கணக்கானோரின் உயிரைக் காத்த உன்னத திட்டம்.
உயிர்க் காக்கும் திட்டமான அம்மா உணவகம் திட்டம் உலக நாடுகளின் கவனத்தையே தன் பக்கம் ஈர்த்த வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம்.
அப்படி சிறப்பு வாய்ந்த இந்த அம்மா உணவகம் திட்டத்தை பாழடித்து மூடத் துடிக்கும், விடியா திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
அம்மா உணவகங்கள் முழுமையாக செயல்பட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.