பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவற்றிகு கட்சி நிர்வாகிகள் காரில் வந்து பங்கேற்க கூடாது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள் கவனத்திற்கு, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் அதில் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மகிழுந்துகளில் வந்து பங்கேற்கக் கூடாது.
Also Read : காஷ்மீரில் தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ அதிகாரி வீரமரணம்..!!
நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் பெண்கள் உள்ளிட்ட பாமகவினரை பேருந்து, மூடுந்துகளில் (வேன்கள்) அழைத்துக் கொண்டு அவர்களுடன் ஒன்றாக பயணித்து வர வேண்டும்.
இனிவரும் காலங்களில் இந்த அறிவுறுத்தலை அனைவரும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது .