மாமன்னன்’ படத்துக்குப் பிறகு ஃபகத் பாசிலுடன் வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தின்(Movie update) அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக எடுத்துக் கூறிய, இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்திந்தது.
நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த இந்த படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார்.
இந்த படத்துக்குப் பிறகு ஃபகத் பாசிலுடன் வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு (Movie update) வெளியாகியுள்ளது.
ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக இந்த படம் உருவாக உள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘ஆறு மனமே’ படத்தை இயக்கியிருந்த சுதீஷ் சங்கர் இந்த படத்தை இயக்குகிறார். இவர் 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வில்லாலி வீரன்’ படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.
https://itamiltv.com/sabarimala-temple-draws-massive-pilgrim-turnout-on-new-year/
மாமன்னன்’ படத்துக்குப் பிறகு வடிவேலுவும், ஃபகத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.