இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் நரேந்திர மோடி பெயரில் ( fake Application ) விண்ணப்பம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிர்ச்சாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தற்போது இருந்து வரும் நிலையில் அவரது பயிற்சி காலம் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் மீண்டும் பயிர்ச்சாளராக ராகுல் டிராவிட் ஆர்வம் காட்டாமல் இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் இந்த பதவிக்கு தற்போது பலர் ஆர்வம் காட்டி விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி இந்த பதவிக்கு பலரும் தற்போது போலியான விண்ணப்பங்களை அனுப்பி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
Also Read : தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் கடும் போட்டி – மேட்டர் என்ன தெரியுமா..?
அதிலும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பெயரில் போலியாக விண்ணப்பங்கள் பதிவு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூகுள் விண்ணப்பம் மூலம் பெயர்களை பதிவு செய்ய பிசிசிஐ கூறிய நிலையில் போலி விண்ணப்பங்களால் தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
மோடி, அமித்ஷா மட்டுமின்றி சச்சின், தோனி, சேவாக் ஆகியோரின் பெயர்களிலும் போலியாக விண்ணப்பம் பதிவாகி உள்ளது.
மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான ( fake Application ) விண்ணப்பம் என கண்டறிவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.