சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் ( fake Email ) பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பள்ளி , கல்லூரிகள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தொலைபேசி வாயிலாகவும் , இ-மெயில் வாயிலாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பஉடுத்தப்பட்டுள்ளது .
Also Read : லேப்டாப்-க்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் உயிரிழப்பு..!!
விமான நிலையம் வரும் ஒவ்வொருவரும் சோதனை செய்யப்பட்ட பிறகே விமான நிலையத்தின் உள்ளேயோ அல்லது வெளியேவோ அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமானநிலையம் உள்பட 5 இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொன்றாக வெடிக்கும் எனவும் மிரட்டல் வந்துள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் இரவு மற்றும் அதிகாலை என 2 இ-மெயில்களில் ( fake Email ) வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இது போலி மிரட்டல் என தெரியவந்த நிலையில், இ-மெயில் அனுப்பியவரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.