முடங்காமல் ஆங்காங்கே துளிர்விட்டு வரும் மூட நம்பிக்கையால் தமிழகத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த அலமேலு என்ற 50 வயதான பெண் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூரில் உள்ள ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்திய போலீசார் போலி சாமியார் ஒருவரை கைது செய்து கிடுகுப்பிடி விசாரணை நடத்தினர்.
Also Read : வேகமெடுக்கும் ஹரியானா தேர்தல் – பறிமுதல் வேட்டையில் களமிறங்கிய பறக்கும் படை..!!
அப்போது திருவண்ணாமலையில் உயிர்போக வேண்டும் என அலமேலு என்ற பெண்மணி விரும்பியதால் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்
திருவண்ணாமலையில் கூட்டம் அதிகம் இருந்ததால் அருகில் உள்ள கொளத்தூருக்கு அழைத்துச்சென்று கத்தியால் கழுத்தை அறுத்துக்கொன்றதாக போலி சாமியார் தட்சன் தெரிவித்துள்ளார்.
தினம்தோறுய் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் திருவண்ணாமலையில் பெண் ஒருவர் கழுத்து அறுபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.