ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் கடந்த வாரம் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அடிலெய்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை தனது 74வது வயதில் காலமானார்.
1970 -84 காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பராக இருந்த இவர் 96 டெஸ்ட் உட்பட 188 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.. விக்கெட் கீப்பராக 479 விக்கெட்களை வீழ்த்தியது அப்போது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது..
மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் உட்பட 3633 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குனராகவும்இருந்துள்ள மார்ஷ் இங்கிலாந்து அணியின் தேர்வுக்குழு தலைவராகவும் சிறிது காலம் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து குயின்ஸ்லாந்தில் உள்ள அடிலெய்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.