பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே பைக்கில் சென்றபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது விலையுயர்ந்த பைக்கில் அதிவேகமாக பைக்கில் சென்று வீலிங் சாகசம் செய்யமுற்பட்டபோது டிடிஎஃப் வாசன் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார் .
இந்த கோர விபத்தில் வாசனுக்கு சிறு சிராய்ப்புகள் மற்றும் கை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இதுமட்டுமல்லாமல் பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி பறக்கும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி செம வைரல் ஆகி வருகிறது .
இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே விபத்தில் சிக்கிய பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . மேலும் விபத்தில் சிக்கி சேதமடைந்த பைக்கையும் பறிமுதல் செய்துள்ளனர் .
ஏற்கனவே அதிவேகமாக பைக் ஓட்டுதல் ஆதரவாளர்களுடன் கூட்டம் சேர்த்து பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் போன்ற காரணத்திற்காக வாசன் மீது பல வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது .