அர்ஜென்டினாவிலுள்ள கால் பந்து மைதானத்தில் வியாழன் கிழமை இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியினை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். அந்த போட்டியிக்கான டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்த நிலையில் மைதானம் முழுவதும் ரசிகர்கள் நிரம்பி வழிந்தனர்.
இது போக மைதானத்திற்கு வெளியே 10,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடியதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் பின்னர் யாரும் மைதானத்திற்குள் செல்ல முடியாத நிலை உருவானது. அங்கு திரண்ட ரசிகர்கள் தங்களை உள்ளே அனுமதிக்கும்படி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்த முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும். ரசிகர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் அதிகமாக சேர்ந்ததால் நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றது உடனே போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆதாகன் பின்னர் இந்த சம்பவத்தில் ஒரு ரசிகர் இறந்தார். சிலர் காயம் அடைந்தனர்.
கண்ணீர் புகை குண்டு தாக்குதலிருந்து தப்பிக்க ஏராளமான ரசிகர்கள் மைதானத்தின் மையப்பகுதிக்கு சென்றனர். இதனால் போட்டி ஆரம்பித்த 9 தாவது நிமிடமே போட்டி நிறுத்தப்பட்டது. இதனால் வீரர்கள் தங்கள் அறைக்கு திரும்பினர். இந்த நிகழ்வால் அங்கு இருந்த ரசிகர்கள், வீரர்கள் மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டனர்.